English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
05 Nov, 2021 | 3:52 pm
நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அவர் நேற்று முன்தினம் (03) பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.
விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த இளைஞரைபாய்ந்து சென்று பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் அந்நபர் கூறியுள்ளார்.
மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிஸார் வாலிபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது.
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு பொலிஸாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, பெங்களூரு பொலிஸார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்துள்ளனர். அவர் கேரளாவை சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Jul, 2022 | 08:34 PM
08 Jul, 2022 | 04:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS