வட்டவளையில் பொல்லால் அடித்து பெண் கொலை

வட்டவளையில் பொல்லால் அடித்து பெண் கொலை

வட்டவளையில் பொல்லால் அடித்து பெண் கொலை

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2021 | 11:55 am

Colombo (News 1st) வட்டவளை – மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவிய பிரச்சினை அண்மையில் தீர்க்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று மாலையில் மதுபோதையுடன் இருந்த நபரால் மீண்டும் பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அயல்வீட்டாருடன் ஏற்பட்ட கைகலப்பை விலக்குவதற்காக சென்ற 55 வயதான பெண் பொல்லால் தாக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த குறித்த பெண் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் 27 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்