by Bella Dalima 05-11-2021 | 6:18 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த - மாபிம வீதியில் பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்டாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவராலும் பிள்ளைகளாலும் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்த குறித்த பெண்ணை கொலை செய்து பயணப்பொதியில் வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த மாதம் 28 ஆம் திகதி ப்ளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் மற்றொரு பெண்ணுடன் முச்சக்கரவண்டியில் ஏறிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.