தென் ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு இவ்வாண்டிற்கான புக்கர் பரிசு

தென் ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு இவ்வாண்டிற்கான புக்கர் பரிசு

தென் ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு இவ்வாண்டிற்கான புக்கர் பரிசு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2021 | 5:14 pm

Colombo (News 1st) இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரிய விருதான புக்கர் (Booker) பரிசு இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Damon Galgut எனும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியத்துறையில் சிறந்த ஆக்கங்கள் என கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசிற்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் Damon Galgut எழுதிய The Promise என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் The Promise தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுத் தொகை வழங்கப்படவுள்ளது.

முன்னதாக Damon Galgut 2 முறை புக்கர் பரிசின் இறுதிச்சுற்று வரை தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்