சேதனப் பசளை எனும் போர்வையில் நாட்டின் விவசாய காணிகள் விற்கப்படுமா: எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகம்

சேதனப் பசளை எனும் போர்வையில் நாட்டின் விவசாய காணிகள் விற்கப்படுமா: எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகம்

சேதனப் பசளை எனும் போர்வையில் நாட்டின் விவசாய காணிகள் விற்கப்படுமா: எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2021 | 8:54 pm

Colombo (News 1st) சேதனப் பசளை எனும் போர்வையில் நாட்டின் விவசாய காணிகளை தரிசு நிலங்களாக மாற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நிரல் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

SLS தர நிலைகள், தாவர தனிமைப்படுத்தல் சட்டம் போன்றவற்றை மீறி இறக்குமதி செய்யப்படும் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உர இறக்குமதியானது ஒரு புதிய இராஜதந்திர நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் பாரிய உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒட்டுமொத்த மக்கள் நலன் கருதி, நிலையான புதிய விவசாய திட்டமொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்