16 வயது சிறுவன் செலுத்திய ஜீப் 4 வாகனங்களுடன் மோதி விபத்து; ஒருவர் பலி

by Bella Dalima 04-11-2021 | 5:06 PM
Colombo (News 1st) வெலிசறை - மஹபாகே பகுதியில் 16 வயது சிறுவன் செலுத்திய ஜீப் 04 வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதான ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த 17 வயதான இளைஞர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன தொடர்புடைய 16 வயதான சிறுவனும் அவரின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.