வெலிகமை ஹோட்டலில் எரிவாயு தாங்கி வெடித்து மூவர் காயம்

by Bella Dalima 04-11-2021 | 4:08 PM
Colombo (News 1st) வெலிகமையில் அமைந்துள்ள ஹோட்டலில் எரிவாயு தாங்கி வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். ஆண்கள் இருவர் மற்றும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.