வெனிசுவெலா: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை

வெனிசுவெலாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை

by Bella Dalima 04-11-2021 | 5:13 PM
Colombo (News 1st) வெனிசுவெலாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உண்மையை அறிந்துகொள்வதற்கான அடுத்த கட்ட செயற்பாடாக இதனை தாம் கருதுவதாக வெனிசுவெலா ஜனாதிபதி Nicolas Maduro தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.