by Bella Dalima 04-11-2021 | 4:27 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டு பகுதியில் பயணப்பொதி ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த பகுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பில் சப்புகஸ்கந்த பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.