மாணவர்களுக்கு கொரோனா தொற்று - தடுக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று - தடுக்க நடவடிக்கை

by Chandrasekaram Chandravadani 03-11-2021 | 10:26 AM
பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்றுடன் அதிக மாணவர்கள் அடையாளம் காணப்படும் பாடசாலைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் எடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார். கொரோன தொற்றுடன் பாடசாலை மாணவர்கள் சிலர் அடையாளங்காணப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதுள்ளதாகவும் இது குறித்து தொற்று நோய் ஆய்வு பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாகவும் இதனூடாக கொத்தணிகள் உருவாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.