சீனிக்கான நிர்ணய விலையை நீக்க  தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க தீர்மானம்

by Chandrasekaram Chandravadani 03-11-2021 | 5:46 PM
சீனிக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நேற்று நிதியமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இந்த கலந்துரையாடலி சீனி இறக்குமதியாளர்களும் கலந்து கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக சந்தையில் சீனி விலை அதிகரிக்கின்றமை, கப்பல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கின்றமை, டொலரின் தொடர்பில் காணப்படும் நடைமுறை சிக்கல் காரணமாக நிர்ணய விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதியாளர்களினால் ஒரு கிலோகிராம் சீனியை 150 ரூபாவிற்கு நுகர்வோருக்கு விநியோகிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்தால், விலையைக் குறைப்பதற்கும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது