நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Nov, 2021 | 10:32 am

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் தி​ணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு,மேல், தென்,மாகாணங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்ட,ங்களிலும் இன்று 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் தி​ணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவ்ட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று இரவு 8 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்