வட மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2021 | 3:49 pm

Colombo (News 1st) வட மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று (01) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 970 பேருக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரியே வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சுகாதார தொண்டர்கள் 388 பேருக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அவர்கள் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், நியமனக் கடிதங்கள் அனுப்பப்படாதவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாதவர்கள் தங்கள் மீது அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அனைவருக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்