மாகாணங்களுக்கிடையிலான அலுவலக ரயில் சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான அலுவலக ரயில் சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான அலுவலக ரயில் சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2021 | 11:48 am

Colombo (News 1st) மாகாணங்களுக்கிடையிலான அலுவலக ரயில் சேவை இன்று (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம், ரயில்களை சேவையில் ஈடுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

152 ரயில் சேவைகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

பெலியத்தயிலிருந்து கண்டி , மஹவ, சிலாபம் ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

மாகாணங்களுக்குள் இடம்பெறும் ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நேற்று (31) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்