பிரதேச மக்களின் தாக்குதலால் கொள்ளையர் கொலை; முல்லேரியாவில் சம்பவம்

பிரதேச மக்களின் தாக்குதலால் கொள்ளையர் கொலை; முல்லேரியாவில் சம்பவம்

பிரதேச மக்களின் தாக்குதலால் கொள்ளையர் கொலை; முல்லேரியாவில் சம்பவம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2021 | 12:32 pm

Colombo (News 1st) முல்லேரியா -மாலிகா கொடெல்ல பகுதியில் வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட மூவரில் ஒருவர் பிரதேச மக்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் மூவரும் வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீட்டு உரிமையாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் வருகை தந்து கொள்ளையர்களை தாக்கியுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்