இன்று (01) முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது

இன்று (01) முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2021 | 11:29 am

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் இன்று (01) முதல் பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி 6 மாதங்கள் கடந்தோருக்கே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார், விமான நிலைய ஊழியர்கள், சுற்றுலாத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை வழங்கப்படுவோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே பெரும்பாலானோர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5,41,073 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று 18 COVID மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,743 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்