வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியை இன்று (31)

வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியை இன்று (31)

வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியை இன்று (31)

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2021 | 10:57 am

Colombo (News 1st) காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் அக்கமகா பண்டிதர் கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளன.

இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

தேரரின் மறைவை முன்னிட்டு இன்று துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடல் பேலியகொடை வித்யாலங்கார பிரிவெனாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் கடந்த 27ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.

84 வயதான அன்னார், பௌத்த கல்வி மத்திய நிலையமான பேலியகொடை வித்தியாலங்கார பிரிவெனாவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்