யேமன் விமான நிலைய வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு

யேமன் விமான நிலைய வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு

யேமன் விமான நிலைய வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2021 | 1:56 pm

Colombo (News 1st) யேமன் தலைநகர் Aden விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறித்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (30) Aden விமான நிலையத்தின் வௌிப்புற நுழைவாயிலின் அருகில் இருந்த சிறிய ரக வாகனமொன்றே வெடித்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனிடையே குறித்த வாகனத்தில் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்ததாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் அருகாமையிலிருந்த வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்