பஸ் ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம்

தனியார் பஸ் ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம்...

by Staff Writer 30-10-2021 | 1:10 PM
Colombo (News 1st) தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டையை சோதனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கொமாண்டர் நிலான் மிரெண்டா குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதுடன், நாளை மறுதினம் (01) தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்