by Staff Writer 29-10-2021 | 5:04 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுமார் 40 மில்லியன் ரூபா லசலவில் தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் இணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளனர்.
இதன்மூலம் பல்வேறுபட்ட உபகரணங்களும் தளபாடங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அலகினை பேராசிரியர் பி.டி.ஆர். மகுலொழுவா திறந்து வைத்துள்ளார்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், துறைசார் வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.