மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

by Staff Writer 29-10-2021 | 3:52 PM
Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (29) இடம்பெற்ற கொவிட் - 19 ஒழிப்பு செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ⭕ க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பாடசாலை கல்வியை மீள ஆரம்பிக்க தீர்மானம் ⭕ பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக இன்றைய கூட்டத்தின் போது சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.