by Staff Writer 29-10-2021 | 12:20 PM
Colombo (News 1st) பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
வேணாவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.