by Staff Writer 28-10-2021 | 8:54 AM
Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபத்தின் தலைமை நாயக்க தேரருமான கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் நேற்றிரவு (27) இறையடி சேர்ந்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேரர் இயற்கை எய்தியுள்ளார்.
84 வயதான அன்னார், பௌத்த கல்வி மத்திய நிலையமான பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
மிக நீண்டகாலம் சமயம் மற்றும் சமூக சேவைகளில் கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் ஈடுபட்டுள்ளார்.