யாழில் கெப் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 06 ​பேர் காயம்

யாழில் கெப் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 06 ​பேர் காயம்

யாழில் கெப் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 06 ​பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2021 | 5:45 pm

Colombo (News 1st) யாழ். தென்மராட்சி – தனங்கிளப்பு A32 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (28) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நேக்கி பயணித்த சிறிய ரக கெப் வாகனமும் பூநகரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கெப் வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்