முல்லைத்தீவில் இராணுவம் வசமிருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு 

முல்லைத்தீவில் இராணுவம் வசமிருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2021 | 9:23 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 11 ஏக்கர் காணி இன்று (28) மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான ஆவணம், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.கே.ஏ. பிலப்பிட்டியவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

682 ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்