சீனி இறக்குமதிக்கு தேவையான டொலர் தொகையை விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனி இறக்குமதிக்கு தேவையான டொலர் தொகையை விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனி இறக்குமதிக்கு தேவையான டொலர் தொகையை விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2021 | 11:14 am

Colombo (News 1st) சீனி இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்களால் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொலர் தொகையை விநியோகிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சீனி இறக்குமதி செய்யப்படுவதுடன், நிர்ணய விலையிலும் சீனியை விற்பனை செய்ய முடியும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சீனி இறக்குமதியாளர்கள் இடையே நேற்று (27) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, சீனிக்கான கட்டுப்பாடு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சில பகுதிகளில் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுகின்றது.

வௌ்ளை சீனி ஒரு கிலோகிராம் 122 ரூபாவிற்கும் சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்