காத்தான்குடி – குட்வின் சந்தி வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

காத்தான்குடி – குட்வின் சந்தி வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

காத்தான்குடி – குட்வின் சந்தி வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2021 | 11:47 am

Colombo (News 1st) மட்டக்களப்பு – காத்தான்குடி, குட்வின் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இன்று (28) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது காயமடைந்த 20 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்