அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்காக 164 வாகனங்கள் கையளிப்பு

அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்காக 164 வாகனங்கள் கையளிப்பு

அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்காக 164 வாகனங்கள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2021 | 4:58 pm

Colombo (News 1st) அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்கு தேவையான 164 வாகனங்களை உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (28) நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், சுகாதார அமைச்சு மற்றும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளுக்கு 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு 52 தண்ணீர் பவுசர்கள் மற்றும் 62 கெப் ரக வாகனங்கள் என்பன கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்ட 150 மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள்கள், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்