செயற்கை உர பயன்பாட்டை குறைத்து நைட்ரஜன் கழிவுகளை குறைப்பதில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

செயற்கை உர பயன்பாட்டை குறைத்து நைட்ரஜன் கழிவுகளை குறைப்பதில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

செயற்கை உர பயன்பாட்டை குறைத்து நைட்ரஜன் கழிவுகளை குறைப்பதில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2021 | 3:46 pm

Colombo (News 1st) செயற்கை உரப் பயன்பாட்டினை குறைத்து, சுகாதார பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கும் நைட்ரஜன் கழிவுகளை குறைப்பதற்கும் இலங்கை முன்னின்று செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் இன்று (27) தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டேரஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களும் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த காலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

மனிதன், புவி மற்றும் சுபீட்சத்திற்கான காலநிலை செயற்பாட்டுத் திட்டம் என்ற தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்