பேராசிரியர் புத்தி மாரம்பே விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம்

by Staff Writer 26-10-2021 | 1:24 PM
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில், விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்கவிற்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய விவசாய கொள்கை வகுப்பு குழுவின் உறுப்பினர் பதவி, விவசாய நவீனமயப்படுத்தல் செயற்றிட்ட வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் பதவி மற்றும் சிறு வர்த்தக விவசாய செயற்றிட்டத்தின் ஆலோசகர் பதவியிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.