யாழில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 26-10-2021 | 11:36 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தபால் நிலைய வீதிக்கு அருகாமையிலுள்ள காணியொன்றின் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று (25) பிற்பகல் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றை இறைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே வெடிப்பொருட்கள் உள்ளமை தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பை ஒன்றில் பொதியிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.