இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதை

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2021 | 6:31 pm

Colombo (News 1st) ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மொஸ்கோ நகரில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலகே செலியுகோவ் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் அழைப்பிற்கு ஏற்பவே இராணுவத் தளபதி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மொஸ்கோ நகரில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள பூங்காவொன்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு இராணுவத் தளபதி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த விஜயத்தின் போது இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்