இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

T20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

by Bella Dalima 25-10-2021 | 6:07 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக நேற்று (24) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 84 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்தது. ரிஷப் பண்ட் 39 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் விராட் கோஹ்லி 57 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்​பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றது. இளம் வீரர் சஹீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். பாகிஸ்தான் வெற்றியிலக்கை 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி கடந்தது. மொஹமட் ரிஷ்வான் 79 ஓட்டங்களையும் அணித்தலைவர் பாபர் அஸாம் 68 ஓட்டங்களையும் பெற்றனர். T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.