விடைபெற்றுச் செல்லும் ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

விடைபெற்றுச் செல்லும் ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

விடைபெற்றுச் செல்லும் ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2021 | 8:07 pm

Colombo (News 1st) தமது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா (Sugiyama Akira) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்தார்.

6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொடுப்பதற்கும் COVID தொற்று ஒழிப்பினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் சுகியாமா அகிரா ஆற்றிய சேவையை ஜனாதிபதி இதன்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பலப்படுத்தி, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தான் முயற்சிப்பதாக இதன்போது ஜனாதிபதியிடம் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்