திரவ உர இறக்குமதி: வங்கிக் கணக்கு விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

திரவ உர இறக்குமதி: வங்கிக் கணக்கு விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2021 | 3:10 pm

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து திரவ உர இறக்குமதியின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்திய விடயம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இறக்குமதிக்காக 29 கோடி ரூபா பணம் தனியார் நிறுவனமொன்றினால் கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அந்த பணத்தில், 09 கோடியே 20 இலட்சம் ரூபா மாத்திரம் உர இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மீதி பணம் அந்த கணக்கிலேயே வைப்பிலுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்