அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே CID-இல் முறைப்பாடு

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே CID-இல் முறைப்பாடு

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே CID-இல் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2021 | 5:46 pm

Colombo (News 1st) அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆட்சேபித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் எந்தவொரு நிலைமையின் கீழும் எந்தவொரு தினத்திலும் சஹரான் ஹாசிம் அல்லது அவருடைய வழியை பின்பற்றியவர்களுடன் தொடர்புகளை பேணவில்லை என அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்