அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு

அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2021 | 3:48 pm

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் அமரத்துவம் அடைந்ததன் மூன்று மாத பூர்த்தியை முன்னிட்டு நாட்டிலுள்ள சில ஆலயங்களில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களது ஆத்மசாந்தி வேண்டி யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் ஆலயத்தில் மோட்சார்ச்சனையும் மோட்ச விளக்கேற்றல் உள்ளிட்ட விசேட பூஜைகளும் இன்று நடைபெற்றன.

நகுலேஸ்வர ஆதீனகுரு நகுலேஸ்வர குமாரசாமி குருக்கள் தலைமையில் இந்த பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.

அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மூன்றாம் மாத நினைவு நாள் விசேட பூஜை மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திலும் இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஶ்ரீ தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலும் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதனிடையே, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன்
அவர்களை நினைவுகூர்ந்து கண்டி – மஹியாவ ஜாமியுல் ஹைராத் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று மர நடுகை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விசேட சொற்பொழிவும் துஆ பிராத்தனையும் நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்