ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது

எழுத்தாளர் Bella Dalima

24 Oct, 2021 | 2:12 pm

இந்திய சினிமாத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

ஆண்டு தோறும் இந்திய மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேயின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதிற்கு நடிகர் ரஜினிகாந்த் தெரிவு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.

கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், நாளை (25) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினிகாந்த் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினிகாந்த் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார்.

எனினும், இந்த நேரத்தில் இயக்குநர் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்