குப்பியாவத்தையில் மோதல்: சந்தேகநபரை கைது செய்ய சென்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2021 | 11:36 am

Colombo (News 1st) கடவத்தை – குப்பியாவத்தை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, சந்தேகநபரின் உறவினர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காததால், அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்