இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கை வருகை

by Staff Writer 24-10-2021 | 4:01 PM
 Colombo (News 1st) இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. பயிற்சி நடவடிக்கைக்காக இந்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்திற்கு 4 கப்பல்களும் வருகை தந்துள்ளன. INS Magar, INS Shardul, INS Sujata (P56), INS Tarangini, INS Sudarshini, CGS Vikram ஆகிய கப்பல்களே வருகை தந்துள்ளன. இந்திய கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுடனான கெடட் படையினர் இந்த கப்பல்களில் வருகை தந்துள்ளனர்.