பிரித்தானிய மகாராணி மருத்துவமனையில் அனுமதி

பிரித்தானிய மகாராணி மருத்துவமனையில் அனுமதி

by Bella Dalima 23-10-2021 | 3:39 PM
Colombo (News 1st) மருத்துவர்களின் அறிவுரைப்படி வடக்கு அயா்லாந்து பயணத்தை இரத்து செய்துள்ள பிரித்தானிய மகாராணி எலிசபெத் (95), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஒய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா். கொரோனா அல்லாத பிற உடல் நல பிரச்சினையிலிருந்து அவர் தேறி வருவதாகவும் விரைவில் அவர் தனது பணிகளைத் தொடர்வார் எனவும் அரண்மனை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.