வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கட்டுபொத்தயில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

by Bella Dalima 23-10-2021 | 11:26 AM
Colombo (News 1st) சிலாபம் - பல்லம, கட்டுபொத்த பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 12 வயதான சிறுவனே அனர்த்தத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (23) பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. பல்லம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.