ஹப்புத்தளையில் கவனயீர்ப்பு போராட்டம்: தேயிலைக் கொழுந்தை தின்று எதிர்ப்பை வௌிப்படுத்தினார் வடிவேல் சுரேஷ்

ஹப்புத்தளையில் கவனயீர்ப்பு போராட்டம்: தேயிலைக் கொழுந்தை தின்று எதிர்ப்பை வௌிப்படுத்தினார் வடிவேல் சுரேஷ்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 5:24 pm

Colombo (News 1st) உரத்தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஹப்புத்தளையில் இன்று (23) நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தேயிலைக் கொழுந்தை தின்று தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினார்.

ஹப்புத்தளை – கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு, தேங்காய் உடைத்து கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது.

பேரணி ஆரம்பமான போது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸாரல் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் ஹப்புத்தளை நகரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்