வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 11:37 am

Colombo (News 1st) லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடியான முறையில் வௌ்ளைப்பூண்டை கொள்வனவு செய்த நபரின் மகனே பம்பலப்பிட்டியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

1,17,19,520 ரூபா பணத்தை மோசடி செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை வெலிசறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்