பூதர்மடம் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட குழுவை சேர்ந்த ஒருவர் கைது

பூதர்மடம் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட குழுவை சேர்ந்த ஒருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 12:14 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கோப்பாய், பூதர்மடம் பகுதியில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலின் போது வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கூரான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களால் தாக்குதல் மேற்கொண்ட போது, காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்