டெல்டாவை விட டெல்டா பிளஸ் பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது

டெல்டாவை விட டெல்டா பிளஸ் பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது

டெல்டாவை விட டெல்டா பிளஸ் பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 11:46 am

Colombo (News 1st) டெல்டா பிறழ்வை விட டெல்டா பிளஸ் (Delta Plus) பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் இதுவரை எவருக்கும் டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த புதிய துணை பிறழ்வு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.

COVID-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்ட்டா அல்லது டெல்ட்டா பிளஸ் பிறழ்வு தொற்றாது என ஆய்வுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சடுதியாக உருவாகக்கூடிய புதிய பிறழ்வுகளினூடாக துணை பிறழ்வுகளும் உருவாகக்கூடும் என விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ கூறினார்.

புதிய பிறழ்வுகள் வௌிநாடுகளிலிருந்து காவப்பட்டு வருபவை மாத்திரமின்றி, நாட்டிலும் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்