ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கொழும்பு பேராயருக்கு கடிதம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கொழும்பு பேராயருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2021 | 9:45 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தமது கையெழுத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்