இரசாயன உரத்தை கோருபவர்கள் சிறுநீரகத்தையும் கோர வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

இரசாயன உரத்தை கோருபவர்கள் சிறுநீரகத்தையும் கோர வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 9:28 pm

Colombo (News 1st) சேதன பசளையை பிரபலப்படுத்தும் கடுமையான தீர்மானத்தின் போது தேர்தலை மறந்து, விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.

உடுபத்தாவ, புன்னேஹேபொல சேதன பசளை தயாரிப்பு மத்திய நிலையம் மற்றும் சேதன பசளை பயிர் நிலங்களை ஜனாதிபதி இன்று பார்வையிட்டார்.

இதன்போது, விவசாயிகளை தூண்டிவிட்டு இரசாயன உரம் கோருபவர்கள், பின்னர் சிறுநீரகத்தையும் கோர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இரசாயன உரத்தார் சிறுநீரக பிரச்சினை ஏற்படுவதை இவ்வாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த தலைமுறையினருக்காக சேதன பசளை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்