ஆஸ்கர் விருதிற்கு பரைந்துரைக்கப்பட்டுள்ள ‘கூழாங்கல்’

ஆஸ்கர் விருதிற்கு பரைந்துரைக்கப்பட்டுள்ள ‘கூழாங்கல்’

ஆஸ்கர் விருதிற்கு பரைந்துரைக்கப்பட்டுள்ள ‘கூழாங்கல்’

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 5:41 pm

Colombo (News 1st) இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் பரிந்துரையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ‘கூழாங்கல்’ படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கூழாங்கல் படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்படுவதற்காக இரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விருதுகளைக் குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்தின், ரோட்டர்டாம் 50 ஆவது சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதையும் இது வென்றது.

‘டைகர்’ விருதை வென்ற முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்