10 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

10 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

10 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2021 | 11:36 am

Colombo (News 1st) 10 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன அறிவுறுத்தினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 21,154 டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடித்தால் நிச்சயமாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன அறிவுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்